ஜிம்பாப்வேவின் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே முதல் முதலாக ராணுவப் புரட்சிக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக 30 வருடங்களுக்கும் மேலாக ஜிம்பாப்வேயின் அதிபர் பதவியில் நீடித்த முகாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே முதல் முதலாக ராணுவப் புரட்சிக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக 30 வருடங்களுக்கும் மேலாக ஜிம்பாப்வேயின் அதிபர் பதவியில் நீடித்த முகாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேவின் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆப்பிரிக்க
நாடான ஜிம்பாப்வே முதல் முதலாக ராணுவப் புரட்சிக்கு உள்ளாகியுள்ளது. இதன்
காரணமாக 30 வருடங்களுக்கும் மேலாக ஜிம்பாப்வேயின் அதிபர் பதவியில் நீடித்த
முகாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே மக்களுக்கு பொருளாதாரத்
துன்பங்களை ஏற்படுத்திய முகாபே மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு
இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் ராணுவ செய்தித்
தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜிம்பாப்வே ராணுவ தலைமை
அதிகாரி கூறும்போது, "நாங்கள் ஆட்சியைக் கவிழ்க்கவில்லை. குற்றம்
புரிந்தவர்களையே குறி வைத்துள்ளோம். எங்களது பணி முடிந்தவுடன் நிலைமை
இயல்பு நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அனைத்துப் படைகளும்
முகாம்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
ராணுவம்
ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து தலைநகர் ஹராரேயில் மூன்று இடங்களில்
குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. தலைநகர் முழுவதும் ராணுவத்தினர்
குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment