மகாராஷ்டிராவில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் வீட்டில் நுழைந்த
கொள்ளையர்கள் அங்கிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை விட்டு 10,20,
50, 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை திருடிச்சென்றுள்ளனர்.
நாசிக் மாவட்டத்தில் உள்ள கோதிநகரைச் சேர்ந்த திலீப் ரோக்டே அங்குள்ள
மின்வாரிய நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படுவிட்டையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த
2 நாட்களுக்கு முன்பு இவர் வெளியே செல்வதை அறிந்த H கொள்ளையர்கள்
வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் விட்டில் இருந்த 10,20, 50, 100
நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்களை மூட்டையாக கட்டி
திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்களையும் அவர்கள்
எடுத்துச்சென்றனர். இதேபோல் துலே மாவட்டத்தில் ஷாம் பட்டேல் என்பவரின்
வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 10, 20, 100 ரூபாய் நோட்டுகளை
எடுத்துக்கொண்டு செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு கட்டுக்களை அப்படியே
விட்டு சென்றுள்ளனர்.


No comments:
Post a Comment