காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த பாஜக அரசைக் கண்டித்து
புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத்தினர் மோடி உருவ பொம்மையை கொளுத்தி சாலை
மறியலில் ஈடுபட்டனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது
கர்நாடகத்திற்கு சார்பாக மத்திய அரசு நடந்து கொள்ளும் வஞ்சக செயலாகும்.
மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவை முழுவதும்
போராட்டங்கள் வெடித்துள்ளன.
இன்று புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலையில் கூடிய திராவிடர் விடுதலைக்
கழகத்தினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்து போராட்டம் நடத்தினார். அப்போது
கையில் கொண்டு வந்த மோடியின் உருவ பொம்மையை அடித்து கொளுத்த திவிகவினர்
முயற்சி செய்தனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது
போலீசாருக்கும் திவிகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்கள்
அனைவரும் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது, மத்திய தொடர்ந்து
இப்படி நடந்து கொண்டால் தமிழ்நாடு தனிநாடாகும் என்று கோஷங்கள்
எழுப்பப்பட்டன.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து தமிழக விவசாயிகள் வாழ்க்கையில் பாஜக அரசு
விளையாடக் கூடாது. உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலை மத்திய அரசே
செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் போது
வலியுறுத்தப்பட்டன.


No comments:
Post a Comment