தாத்ரியில், மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக்கின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கவுதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரி அருகே, பிசாதா கிராமத்தில் வசித்து வந்த இக்லாக் என்பவர், வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த செப்டம்பர் 29 ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், அவரது மகனும் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
முதலில் இக்லாக்கின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது ஆட்டிறைச்சி என்று சொல்லப்பட்டது. ஆனால் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான் என ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிசாதா கிராம மக்கள் இக்லாக் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.


No comments:
Post a Comment