Latest News

போட்டுத் தள்ளு.. போய்க்கிட்டே இரு... சென்னையை உலுக்கும் கள்ளக்காதல் கொலைகள்!


அன்பே ஆருயிரே.. இனி நாம் ஈருடல் ஓருயிர்... நீ தான் நான்.. நான்தான் நீ.. என்று காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனம் பேசியதெல்லாம் அந்தக் காலம் பாஸ்.. இப்போதெல்லாம் கள்ளக்காதலுக்காக போட்டுத் தள்ளி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஆண்களும், அவர்களுக்குச் சமமாக பெண்களும். சென்னையில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆண்களை பெண்கள் போட்டுத் தள்ளுவதும் சமமான அளவில் அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து கள்ளக்காதல் கொலைகள் சென்னையில் அதிகரித்து வருகின்றன. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் பலரும் இதில் செத்துப் போயுள்ளனர்.

முக்கால்வாசி கள்ளக்காதல்தான் சென்னையில் நடைபெறும் கொலைகளில் பெரும்பாலானவை அதாவது 90 சதவீத சாவுகள் கள்ளக்காதல் தொடர்பானவை என்று போலீஸ் புள்ளிவிவரம் கூறுகிறது.

 கசக்கும் உறவுகள் கள்ளக்காதல் தொடர்பாக குடும்பத்தில் பிளவு, பிரச்சினை, சொத்துத் தகராறு உள்ளிட்டவை ஏற்பட்டு கடைசியில் அது கொலையில் போய் முடிகிறது.

 கூலிப்படைகளுக்குக் கொண்டாட்டம் இதுபோன்ற கள்ளக்காதல் கொலைகளில் பெரிய அளவில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு சரமாரியாக இவர்கள் கொலைகளைச் செய்து குவிக்கிறார்கள்.

2014ல் 90 பலி 2014ம் ஆண்டு சென்னையில் மொத்தம் 141 கொலைகள் போலீஸாருக்கு ரிப்போர்ட் ஆகியுள்ளன. அதில் 90 பேர் கள்ளக்காதல் தொடர்பாக கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

2015ல் 91 அதேபோல 2015ம் ஆண்டு மொத்தக் கொலைகள் 129 ஆக குறைந்திருந்தன. ஆனால் கள்ளக்காதல் கொலை ஒன்று அதிகரித்து 91 ஆக இருந்தது.

 இப்போது இதுவரை 50 இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 65 கொலைகள் விழுந்துள்ளன. அதில் 50 பேர் கள்ளக்காதல் காரணமாக கொல்லப்பட்டவர்கள் என்பது அதிர வைக்கிறது.

வீட்டுக்குள் நடக்கும் கொலைகளே அதிகம் கள்ளக்காதல் கொலைகளில் வெளியில் நடப்பதை விட வீட்டுக்குள் நடக்கும் கொலைகள்தான் அதிகமாக உள்ளது. கள்ளக்காதலிக்காக மனைவியைக் கொல்லும் கணவர்கள், கள்ளக்காதலர்களுக்காக கணவர்களைப் போட்டுத் தள்ளும் மனைவிகள், பெரும்பாலும் இரவு நேரங்களில் விஷம் கொடுத்தோ, தலையணையால் அமுக்கியோ கொலை செய்கிறார்கள்.

கவுன்சிலிங் தேவை கள்ளக்காதலில் ஈடுபடுவது முன்பை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கணவர்களுக்குத் தெரியாமல் மனைவியரும், மனைவிக்குத் தெரியாமல் கணவரும் சகஜமாக ஈடுபட ஆரம்பித்து விட்டனர். இவர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் கொடுத்தால் இதுபோன்ற கொடூரக் கொலைகளை தடுக்க முடியும் என்று போலீஸாரும், சமூக நல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
நன்றி : விகடன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.