மேலும் முத்தாம்பிகையின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தனர்.மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்துக்கு இருவரையும் கொண்டு சென்று அங்கிருந்த ஆண் போலீசாருடன் சேர்ந்த அடித்து துன்புறுத்தியுள்னர். சம்பவம் பற்றி மருத்துவமனையில் இருந்தவர்கள் திருவல்லிக்கேணி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டிக்கு தகவல் அளித்தனர். அவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். மருத்துவமனை வளாகத்தில் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியின் காலில் விழுந்த முத்தாம்பிகையும், தமிழரசும், “நாங்கள் ஒரு தவறும் செய்யவில்லை. எங்களை அடித்து துன்புறுத்தி கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகளை போட்டு கைது செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறி கதறினர்.
அவர்களை சமாதானப் படுத்திய முத்துவேல்பாண்டியிடம் இங்கு சிகிச்சைப் பெறவே பயமாக இருக்கிறது. நாங்கள் ஊருக்கே செல்கிறோம்” எனவும் தெரிவித்தனர்.தொடர்ந்து தமிழரசு, மனைவி முத்தாம்பிகையை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து கிளம்பி செய்யாறு செல்ல முடிவெடுத்துள்ளனர். பின்னர்பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, போரூர் அருகே பனிக்குடம் உடைந்து முத்தாம்பிகை வலியால் துடித்தார். உடனடியாக பயணிகள், ஆம்புலன்சில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
மனிதாபிமானமற்ற முறையில் சட்டம் பயின்று வரும் மாணவியை அவர் கர்ப்பிணி என்றும் பாராமல், தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மருத்துவமனையில் திரண்டிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
நன்றி : ஆனந்த விகடன்


No comments:
Post a Comment