நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் ராவுல் தீவின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 201 கி.மீ., தொலைவில் கேர்மாடெக் தீவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவும் இல்லை.
நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


No comments:
Post a Comment