சென்னை மெரினா கடலில் குளித்த இளைஞர்கள் 4 பேர் நீரில் மூழ்கினர். இதில் இரண்டு இளைஞர்களை பாதுகாப்பு போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சென்னை மெரினா கடற்கரையில், கடலில் இறங்கி விளையாடிய நான்கு இளைஞர்கள் ராட்சத அலையில் சிக்கினர். கடலில் தத்தளித்த அவர்களை பாதுகாப்பு போலீசார் மீட்க போராடினர்.
இதில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட கோபிநாத் உள்பட இரண்டு இளைஞர்களை பாதுகாப்பு போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் குருமூர்த்தி என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மோகன் என்ற இளைஞரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல் டெல்லியை சேர்ந்தவர் அங்கித்(20). ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்கு தணிக்கை பணிக்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். ஞாயிற்றுக்கிழமை சக பணியாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து கடலில் இறங்கி விளையாடினார். அப்போது அலையில் சிக்கிய அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரகுமார் (22). கூடுவாஞ்சேரியை சேர்ந்த சுதர்சன் என்ற பள்ளி மாணவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் எவ்வளவோ அறிவுறுத்தியும் விதிகளை மீறி மெரினாவில் குளித்து கடலில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


No comments:
Post a Comment