வங்கதேசத்தில் ரம்ஜான் தொழுகை நடந்த இடம் அருகே பயங்கரவாதிகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. வடக்கு வங்கதேசத்தின் கிஷோரிகஞ்ச் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை பிரம்மாண்ட தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் சுமார் 2,00,000 பேர் பங்கேற்றனர்.
இத்தொழுகை நடந்த இடத்திற்கு அருகே பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசார் பலியாகினர்.12 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் வங்கதேசத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியாகி இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஐஎஸ் இயக்கம் வெளியிட்ட வீடியோ பதிவில், வங்கதேசத்தில் தாக்குதல்கள் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment