சுவாதி கொலை வழக்கை மும்முரமாக விசாரித்து வரும் காவல்துறை, இன்னும் 15 நாட்களில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய தீர்மானித்து செயல்பாடுகளை முடுக்க விட்டுள்ளது. இதற்காக நுங்கம்பாக்கம் போலீஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்குமாருக்கு எதிராக பல ஆதாரங்கள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் உறுதியாக கூறப்படுகிறது. எனவே ராம்குமாருக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தரும் அளவுக்கு இந்த வழக்கு வலுவாக உள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
எல்லாமே எதிர் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், இந்த வழக்கு குறித்து ஆயிரம் விவாதம் வெளியில் நடக்கலாம். ஆனால் குற்றவாளிக்கு எதிரான அத்தனை ஆதாரங்களையும் நாங்கள் கையில் வைத்துள்ளோம். அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர அது போதும் என்றனர்.
முழுமையான வாக்குமூலம் போலீஸ் தரப்பில் மேலும் கூறுகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்குமார் இந்த குற்றச் செயலை முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளார். விரிவாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். தனது நோக்கம், கொலை செய்த விதம் உள்ளிட்டவை குறித்து அவர் விவரித்துள்ளார். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதல் தோல்வி சுவாதியைக் காதலிக்க முயன்று அதில் தோல்வி ஏற்பட்டதால் விரக்தியும், கோபமும் அடைந்து இந்த செயலை செய்ததாக ராம்குமார் கூறியுள்ளார். விசாரணையின்போது எதையும் மறைக்க அவர் முயலவில்லை. முழுமையாக அவரே எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.
கொலை செய்யும் நோக்கம் இல்லை உண்மையில் கொலை செய்யும் நோக்கத்தில் ராம்குமார் இல்லை. தனது அழகை காரணம் காட்டி நிராகரித்ததால் கோபமடைந்து சுவாதியின் முகத்தை மட்டுமே சிதைக்க முயன்றார் ராம்குமார். கடைசி முறையாக சுவாதியிடம் அவர் பேசியபோது அவர் பயன்படுத்திய வார்த்தைகளால் ஆத்திரமடைந்து கொலை செய்யும் முடிவுக்குப் போய் விட்டார் ராம்குமார்.
வக்கீல்கள் பேச்சைக் கேட்கவில்லை ராம்குமாரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது சிரமமாக இருக்குமோ என்று முதலில் நினைத்தோம். ஆனால் உண்மையில் அவரை எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்ததால் எங்களது பணி எளிதாகி விட்டது. மேலும் அனைத்து புகார்களையும் மறுக்குமாறு தனது வக்கீல் சொன்னதைக் கூட ராம்குமார் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான மூவர் இந்த வழக்கில் சுவாதியின் நெருங்கிய நண்பர் பிலால் மாலிக், சுவாதியின் தந்தை மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என மூன்று முக்கிய வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.
விரைவில் தடயவியல் ஆய்வு முடிவு விரைவில் தடயவியல் சோதனை முடிவுகள் வரவுள்ளன. அந்த அறிக்கையும் கிடைத்ததும் அனைத்தையும் ஒருங்கிணைத்து குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்படும். அது கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment