Latest News

சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு; 4 பேர் படுகாயம்


ஷாங்காய் புடோங் விமான நிலையம் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும். இங்கு இன்று பிற்பகல் 2.20 மணியளவில் 2-வது டெர்மினலில் உள்ள செக்-இன்-கவுண்டருக்கு அருகே திடீரென 


வெடிகுண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும், ஒருவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.