புதுடெல்லியில் இளம்பெண் கடத்தப்பட்டு ஓடும் காரில் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் போலீசில் கொடுத்து உள்ள புகாரில் டெல்லி நிஜாமுதின் பகுதிக்கு சென்றபோது, என்னை நெருங்கிய மூன்று குற்றவாளிகள் காரில் வருமாறு அழைத்தனர். ஆனால் நான் மறுப்பு தெரிவித்தேன். அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுந்துவிட்டனர். காரில் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினேன் என்று கூறிஉள்ளார். கும்பல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது என்று புகாரில் கூறிஉள்ளார். சுமார் இரண்டு மணி நேரங்கள் கழித்து சன்லைட் காலனி பகுதியில் காரில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக கூறிஉள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணைக்காக போலீசார் இருவரை கைது செய்து உள்ளனர்.
No comments:
Post a Comment