மெக்சிகோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய மெக்சிகோ பியூப்லா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று மர்ம நபர்கள் 2 பேர் அதிரடியாக உள்ளே நுழைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள்,4 ஆண்கள், 2 சிறுமிகள் உட்பட 11 பேரை அந்த கொலையாளிகள் சரமாறியாக சுட்டு கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர். மேலும் துப்பாக்கி சூட்டில் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளில் ஒருவர் கொலை செய்யப்பட்ட குடும்பத்து பெண் ஒருவரை பாலியல் பலத்காரம் செய்தால் அந்த பெண் தற்போது கர்பம் ஆகியதால் இதன் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment