தமிழகத்தில் திருச்செந்தூர் கடற்பரப்பில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்திருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஒடிஷா மாநிலத்தின் பூரி கடற்கரையில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பது சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தமிழகத்தில் திருச்செந்தூர் கடற்பரப்பில் ஏராளமான திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின. அவற்றை மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்றுவிட முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
கரைக்கு திரும்பிய அந்த திமிங்கலங்கள் அடுத்தது உயிரிழந்தன. இது பெரும் அதிவர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே ஒடிஷா மாநிலத்தின் பூரி கடற்கரை பகுதியில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருக்கின்றன.இவை ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள். அதேபோல் பாட்டில்நோஸ் டால்பினின் சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன.
இது குறித்த கடற்கரையில் மணல் சிற்பங்கள் செய்யும் சுதர்ஷன் பாட்நாயக் கூறுகையில், கடற்கரையில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறந்து கிடந்ததை பார்த்தேன்... இவ்வளவு அதிகமான அளவில் ஆமைகள் இறந்து கிடந்ததை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருந்தது என்றார். ஆமைகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.


No comments:
Post a Comment