தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்களே அதிகம். தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்த ஒரு பார்வை...
தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.79 கோடி வாக்காளர் பட்டியலில் பெண்களே அதிகம் மொத்த வாக்காளர்களில் 2.91 கோடி பேர் பெண்கள் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.88 கோடி திருநங்கையர் எண்ணிக்கை 4383 ஒவ்வொரு 1000 ஆண் வாக்காளர்களுக்கு 1008 பெண் வாக்காளர்கள் உள்ளனர் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் 6,14,892 பேர் முதல் முறை வாக்காளர்களில் ஆண்களே அதிகம் முதல் முறை ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,45,132 முதல் முறை பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,69,617 முதல் முறை திருநங்கையர் வாக்காளர்கள் 143 பெயர் சேர்க்க வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை 17.10 லட்சம் அதில் 16.18 லட்சம் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்று பெயர் சேர்க்கப்பட்டது வாக்காளர் பட்டியலிலிருந்து 3.85 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் சோழிங்கநல்லூர் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,75,773 குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி கீழே வேளூர் (தனி) கீழ்வேளூர் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,63,189 சோழிங்கநல்லூரில்தான் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் அதிகம் சோழிங்கநல்லூரில் 18-19 வாக்காளர்கள் எண்ணிக்கை 12,797


No comments:
Post a Comment