ஐஆர்என்எஸ்எஸ்-1ஈ செயற்கைகோள், பிஎஸ்எல்வி - சி31 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையம், 2வது ஏவுதளத்திலிருந்து நாளை காலை 9.31 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 48 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை 9.31 மணிக்கு துவங்கியது. கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்து ஆராய்ச்சிக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நேவிகேஷன் வகையிலான 7 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த கடந்த 2013ம் ஆண்டு திட்டமிட்டது. அதன்படி இதுவரை ஐஆர்என்எஸ்எஸ் -1ஏ, பி, சி, டி என 4 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 5வது செயற்கைகோளாக ஐஆர்என்எஸ்எஸ் - 1ஈ, பிஎஸ்எல்வி - சி31 ராக்கெட் மூலம் நாளை 9.31 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டா 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 48 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 9.31 மணிக்கு தொடங்கியது. பிஎஸ்எல்வி - சி31 எக்ஸ்எல் வகையில் 11வது ராக்கெட். நான்கு நிலைகளிலும் எரிபொருள் நிரப்பட்டுள்ள நிலையில், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். ஐஆர்என்எஸ்எஸ் - சி31 செயற்கைகோளின் மொத்த எடை 1425 கிலோ. ஆயிரத்து 660 வாட் திறன்கொண்ட 2 சோலார் பேனல்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள் பூமியிலிருந்து 284 கி.மீட்டர் அருகிலும், 20,657 கி.மீ. தொலைவிலும் 19.2 டிகிரியில் அதன் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுள்காலம் 12 ஆண்டுகள்.


No comments:
Post a Comment