கொழும்பு: தம் மீது அதிபர் சிறிசேன முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு நாளை மறுநாள் பதிலடி தருவேன் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆவேசமாக கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய அனுமதி இல்லமால் மகிந்த ராஜபக்சேவுக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டது; அவரை பிரதமராகவெல்லாம் ஏற்கவே முடியாது; அவர் தேர்தலில் தோற்பது உறுதி என அதிபர் சிறிசேன கூறியிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பில் சிறிலங்க சுதந்திர கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மகிந்த ராஜபக்சேவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்சே, வரும் 17-ந் தேதியன்று அனுராதபுரவில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் சிறிசேனவுக்கு பதிலடி தருவேன்.. அதுவரை பொறுத்திருந்து பாருங்கள் என்று மட்டும் கூறிவிட்டு விறுட்டென அவர் சென்றுவிட்டார்.
No comments:
Post a Comment