2016ம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காந்திய மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், ‘வருகிற 2016 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளோம். 30 தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம். அதன் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்படுகிறது. இடதுசாரி கட்சிகள் திராவிட கட்சிகளை புறக்கணித்து மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து செல்கிறார்கள். ஆகையால் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மீதம் உள்ள தொகுதிகளில் இடதுசாரி கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று தமிழருவி மணியன் தெரிவித்தார்.
பின்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தமிழருவி மணியன். இரா.கதிரேசன் - நாகர்கோவில்
மு.ஆகாஷ்தேவ் - குளச்சல்
நா.ரங்கநாதன் - ஸ்ரீவைகுண்டம்
சு.ஈஸ்வரன் - மதுரை மேற்கு
சி. உமாராணி - திண்டுக்கல்
அ.அருளானந்த் - காரைக்குடி
சி.கருப்பையன் - துறையூர் (தனி)
ச.லாரன்ஸ் - லால்குடி
டென்னில் கோவில் பிள்ளை - கோவை வடக்கு
அ.சு.கிருஷ்ணமூர்த்தி - திருப்பூர் வடக்கு
வள்ளி ரமேஷ் - குன்னூர்
ந.சுப்பிரமணியன் - உதகமண்டலம்
ப.பெரியசாமி ஈரோடு வடக்கு
நா.ரகுபதி - தருமபுரி
வே.பாண்டிகுமார் - ஓசூர்
மு.பாண்டு - செங்கம் (தனி)
தர்ம.தினகரன் - காஞ்சிபுரம்
முகமது உசேன் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி.
No comments:
Post a Comment