அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு
'வீரமங்கை' 'பொய்வழக்கை முறியடிக்க புறப்பட்ட புயல்' என்றெல்லாம்
பட்டங்கள் சூட்டப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சத்திரியன் மக்கள் கட்சியின் தலைவர் மின்னல் ஹெச். ஸ்டீபன் என்பவர்
உருவாக்கியிருக்கும் போஸ்டர் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக்
கொண்டிருக்கிறது. அதில், பொய் வழக்குகளை முறியடிக்க புறப்பட்ட புயல்
என்றும் வீரமங்கை என்றும் பட்டங்கள் சூட்டப்பட்டுள்ளன.
அத்துடன் உண்மையை புரிந்தவர்கள் உங்களது பக்கம்; என்றும் இருக்கும்
நாடார் சமுதாயம் நல்லவர் பக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே
அதிமுகவை சசிகலா தரப்பு கைப்பற்றினால் 'வரலாறு பேசும்; அதிருப்தி
எம்எல்ஏக்கள் என்னுடைன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று சசிகலா
புஷ்பா கூறி வருகிறார்.
இந்த நிலையில் அவரை ஒரு கட்சித் தலைவி ரேஞ்சுக்கு உயர்த்தியிருப்பது
என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? ஏற்கனவே பீப் பாடல் விவகாரத்தில்
சிம்புவுக்கு ஆதரவாக, பச்சைத்தமிழனே கலங்காதே! உண்மையை புரிந்தவர்கள் உனது
பக்கம் என போஸ்டர் அடித்து ஒட்டியதும் இந்த சத்திரியன் மக்கள் கட்சியினர்
என்பது குறிப்பிடத்தக்கது,
No comments:
Post a Comment