ரூ4 கோடி ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிக்கிய போலீசார்
எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து கோழிகோட்டிற்க்கு காரில் எடுத்து சென்ற ரூ4 கோடி ரூபாய்
ஹவாலா பணம் மதுக்கரையில் கடந்த 25-ந் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது. 4 கோடி
ரூபாய் ஹவாலா பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கரூர் மாவட்டம் காவல் ஆய்வாளர்
முத்துகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உதவியதாக குளித்தலை உதவி ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையம்
தலைமை காவலர் தர்மேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இரண்டு போலீசாரை கோவை தனிப் படை
போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் இதுவரை 5 போலீசார் இக்கொள்ளை
சம்பவத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment