உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு போட்டி போட முன்னாள்
அமைச்சர்கள் வளர்மதியும் கோகுல இந்திராவும் முயற்சிகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் தற்போதைய மேயர் சைதை துரைசாமி, நத்தம் விஸ்வநாதனுடன்
இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார் என்பதால் அதிமுக தலைமை கடும்
கோபத்தில் இருக்கிறது. இதனாலேயே சென்னை மாநகராட்சியை பெண்களுக்கு ஒதுக்கி
சைதை துரைசாமிக்கு செக் வைத்துவிட்டார்களாம்.
தற்போது மாஜி அமைச்சர்களான வளர்மதி, கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில்
தோற்ற நூர்ஜஹான் ஆகியோர் சென்னை மேயர் பதவிக்காக முட்டி மோதுகிறார். ஆயிரம்
விளக்கு அல்லது ஆர்.கே.நகர் வார்டுகளில் போட்டியிட வளர்மதி ரெடியாகி
வருகிறார்.
அண்ணா நகர் பகுதியில் போட்டியிட கோகுல இந்திரா முயற்சிக்கிறார்.
சேப்பாக்கம் பகுதியில் போட்டியிட நூர்ஜஹானும் திட்டமிட்டு வருகிறாராம்...
அமைச்சர்களாக வலம் வந்தவர்கள் வார்டு கவுன்சிலர் பதவிக்கும் அடித்துக்
கொண்டால் கடைநிலை தொண்டனுக்கு ஒரு பதவியுமே கிடைக்காதா? என புலம்புகின்றனர்
சென்னை அதிமுகவினர்.
No comments:
Post a Comment