டில்லி
இந்தியாவில் மருத்துவச் செலவால் வருடம் தோறும் 5.5 கோடி மக்கள் ஏழை ஆவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில்
மருத்துவ வசதிகள் அதிகம் உள்ளதால் பல வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்து
சிகிச்சை பெறுகின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில்
சிறப்பான சிகிச்சை மலிவான கட்டணத்தில் கிடைப்பதாக உலகெங்கும்
சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சிகிச்சை இந்தியர்களுக்கு எவ்வளவு
தூரம் பயன்படுகிறது என்பது குறித்து ஆய்வு ஒன்று நடைபெற்றது.
மூன்று
வல்லுனர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பிரிட்டிஷ் மெடிகல்
ஜோர்னல் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இந்திய மருத்துவச் செலவுகள் குறித்த முடிவுகள்
வெளியாகி உள்ளன. அதில், "ஒவ்வொரு வருடமும் சுமார் 5.5 கோடி மக்கள் ஏழை
ஆகின்றனர். அதிலும் 3.8 கோடி மக்கள் தங்கள் மருத்துவச் செலவுக்குப் பிறகு
வறுமைக்கோட்டுக்கு கீழான நிலையை அடைந்து விடுகின்றனர்.
இவ்வாறு
மருத்துவச் செலவுகள் அதிகமாவது பெரும்பாலும் நீரிழிவு மற்றும் இருதய
நோய்களால் தான் என அறியப்பட்டுள்ளது. அரசு இது போன்ற மருந்துகளின் விலையை
பெருமளவு குறைக்க ஏற்பாடுகள் செய்துள்ள போதிலும் அந்த விலை குறைக்கப்பட்ட
மருந்துகள் கிடைப்பது அரிதாக உள்ளன.
அரசு அறிமுகப் படுத்தி உள்ள
3000 ஜன் ஔஷதி ஸ்டோர் மருந்துக் கடைகளில் பல முக்கிய மருந்துகள்
கிடைப்பதில்லை. அரசு மருத்துவ மனையில் போதிய வசதிகள் இல்லாததால் மக்கள்
தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். இதனால் மருத்துவச் செலவுகள் மக்களின்
கட்டுக்கடங்காமல் சென்று விடுகின்றன" என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment