Latest News

ஜில்லென்ற சாரலுடன் தொடங்கியது வடகிழக்கு பருவ மழை... !


சென்னையின் பல்வேறு இடங்களில் சாரல் மழையுடன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடப்பாண்டில், தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது. தற்போது பருவமழைக்கான அறிகுறிகள் வலுவடைந்துள்ளன. 'வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்குப் பருவமழை 28ம் தேதி முதல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது

மழை தொடங்கியது இலங்கை அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவில் சாரல் மழை பெய்தது. அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் தஞ்சை திருவையாறு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம் முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இதே போல், மேட்டூரில் இரவு முழுதும் மழை பெய்தது.

கனமழை கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள காவேரிப்பட்டினம், பர்கூர், வேப்பனஹள்ளி உட்பட பல்வேறு இடங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது. கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழக அரசு தயார் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையிலுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து துறைகளும் இணைந்து செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அதில், மாநில நிவாரண ஆணையர், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அவசர கட்டுப்பாட்டு மையம் மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.