லண்டன்: இந்தியாவில் கடந்த 2000 முதல் 2014ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிதாக ஹெச்.ஐ.வி தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது ஐநா அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. "எப்படி எய்ட்ஸ் எல்லாவற்றையும் மாற்றுகிறது - எம்.டி.ஜி 6:15 வருடங்கள், 15 எய்ட்ஸ் பற்றிய நம்பிக்கை பாடங்கள்' என்ற தலைப்பில் ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள் குறித்து ஐநாவின் மில்லனியம் டெவலப்மெண்ட் கோல்ஸ் ( எம்.ஜி.டி.) ஆய்வு மேற்கொண்டது. அதில், புதிய ஹெச்.ஐ.வி தொற்றுகள் 35 சதவீதமும், எய்ட்ஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 41 சதவீதமும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது கடந்த 2000ம் ஆண்டு, 3 கோடி புதிய ஹெச்.ஐ.வி தொற்று உள்ளவர்களும், சுமார் 80 லட்சம் பேர் எய்ட்ஸால் உயிரிழந்தது தெரிய வந்தது.
மகிழ்ச்சி தான்... இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிக்கை வெளியீட்டுக்குப் பின்னர் பேசுகையில், "நாங்கள் உறுதி அளித்தபடி இந்த குறைவு இல்லைதான். இருப்பினும் தேவையான அளவுக்கு குறைந்துள்ளது மகிழ்ச்சி தான்.
பாராட்டு... உலக நாடுகள், உலக அரசுகளின் தீவிர செயல்பாடு காரணமாக, மக்களின் விழிப்புணர்வு காரணமாக நோய் பாதிப்பு குறைந்துள்ளது. இது பாராட்டுக்குரியது.
எய்ட்ஸ் இல்லாத தலைமுறை... எட்ய்ஸ் இல்லாத புதிய தலைமுறையை நோக்கி உலகம் நகரத் தொடங்கியுள்ளது என்பது சந்தோஷமான செய்திதான். மேலும் உலகம் முழுவதும் 75 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் எச்ஐவி பாதிப்பு இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்" என்றார் அவர்.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள்... இந்தியாவைப் பொறுத்தவரை எச்ஐவி பாதிப்பு வெகுவாக குறைந்திருக்கிறது. பல்வேறு தகவல்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதையே இது காட்டுவதாக கூறுகிறார்கள்.
சிகிச்சை... மேலும் எச்ஐவி, டிபி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் தற்போது சிகிச்சை எளிதாக கிடைக்கிறது. மேலும் சிகிச்சை வசதிகளும் முன்பை விட மேம்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, ஜாம்பியாவில் இந்தவசதிகள் முன்பை விட மேம்பட்டுள்ளனவாம்.
இந்தியர்கள்... ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எச்ஐவி பாதிப்புக்குள்ளான டிபி நோயாளிகளில் 60 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment