தமிழகம் முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மல்லிகா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.
கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது ஆனாலும் இதனையாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மல்லிகா என்பவர் இது குறித்து தொடர்ந்த வழக்கு சென்னையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரண், வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்றும், ஹெல்மட் அணியாவிட்டால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இது சம்பந்தமான முந்தைய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ஏற்கெனவே உள்ள சாலை விதிகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சலை உள்ளிட்ட இடங்களில் கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment