இந்திய ரயில்வே துறை பல்வேறு பணி வாய்ப்புகளைத் தரும் மிகப்பெரிய அரசு நிறுவனமாகும். இந்த ரயில்வே துறையுடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படை பயணிகளையும் பயணிகளின் உடைமைகளையும் ரயில் நிலையங்களையும் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையின் பல்வேறு கிளைகளில் உள்ள கான்ஸ்டபிள் பிரிவிலான 17 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஆண், பெண் இருபாலருக்குமான பணி வாய்ப்புகள் உள்ளன. ஆண் காவலர்கள் 13,000 பேரும், பெண் காவலர்கள் 4,000 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ரயில்வே பாதுகாப்புப் படையினரின் பணிகள்:
ரயில் பயணிகள், பயணிகள் பகுதி மற்றும் ரயில்வே சொத்து ஆகியவற்றைப் பாதுகாத்தல். ரயில்வே பகுதிகளில் நடமாடும் குற்றவாளிகளைக் கண்காணித்தல்; அவர்களைக் கைது செய்தல்.
சமூக விரோதக் கூறுகள் அனைத்தையும் நீக்கி ரயில்வே பயணிகளுக்கும், ரயில்வே சொத்துகளுக்கும் பாதுகாவல் தருதல்.
மகளிர் மற்றும் குழந்தை கடத்தலைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் ரயில்வே பகுதி களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து மறுவாழ்வு அளித்தல்.
இதர ரயில்வே அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி மதிப்பை அதிகரித்தல்.
அரசு ரயில்வே காவலர்கள்/ உள்ளூர் காவலர்களுக்கும் மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கும் பாலமாகச் செயல்படுதல்
அனைத்து நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றியும், சிறந்த மனித உரிமை நடைமுறைகளைக் கொண்டும், மேலாண்மை உத்திகளுடன் பயணிகளைப் பாதுகாத்தல்.
சம்பள விவரம்
ரூ. 5,200/-20200 கிரேடு பே - 2000
கல்வித் தகுதி
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அந்தந்த பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் எஃபிஷியன்சி டெஸ்ட், பிஸிக்கல் மெஷர்மென்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் ஆகிய நிலைகளில் தேர்ச்சி முறை இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தெளிவாகப் படிக்க வேண்டும். அதன் பிறகு, கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்து ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தை அப்லோட் செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்பட இணையதளத் தகவல்களின்படி செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் ஏதுமில்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.3.2015
No comments:
Post a Comment