பைனான்சியர் போத்ராவிடம் தனுஷின் அப்பா இயக்குநர் கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு தான் எந்த உத்தரவாதமும் தரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வட சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் போத்ராவிடம் கஸ்தூரிராஜா ரூ 65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்தத் தொகையை அவர் திருப்பிச் செலுத்தாததால், அவர் மீது மோசடி வழக்குத் தொடர்ந்தார் போத்ரா. அதில், தான் வாங்கிய கடனுக்கு ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துள்ளதாக தன்னிடம் கூறித்தான் கஸ்தூரிராஜா கடன் வாங்கினார் என்றும், இப்போது கடனை திருப்பித் தராததால், ரஜினியை இதில் தலையிடக் கோர வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது நீதிமன்றம். இதற்கு பதிலளிக்கும் வகையில் மனு தாக்கல் செய்துள்ள ரஜினிகாந்த், கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் உத்தரவாதம் வழங்கவில்லை என்றும், தமது பெயருக்கு களங்கம் விளைவிக்க பைனான்சியர் போத்ரா முயற்சிப்பதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் பைனான்சியர் போத்ரா மனுவை தள்ளுபடி செய்யவும் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment