தகுதியுள்ள இளைஞர்கள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்றோம்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி:
நிர்வாக அதிகாரி (ஸ்கேல் - 1): 246 இடங்கள். (பொது - 125, ஒபிசி - 60, எஸ்சி - 40, எஸ்டி - 21). இவற்றில் 19 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. அக்கவுன்ட்ஸ்
100 இடங்கள்.
தகுதி:
சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (ஐசிஏஐ)/ பி.காம்/ எம்.காம்.
2. ஆக்சூரிஸ்
2 இடங்கள்.
தகுதி:
கணிதம்/ புள்ளியியல்/ ஆக்சூரியல் அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம் அல்லது பட்டப்படிப்புடன் அக்சூரியல் சொசைட்டி ஆப் இந்தியா நடத்தும் தேர்வில் குறைந்த பட்சம் 4 தாள்களில் தேர்ச்சி.
3. ஜெனரலிஸ்ட்:
50 இடங்கள்.
தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
4. சட்டம்:
44 இடங்கள்.
தகுதி:
பி.எல். பட்டம்.
5. மார்க்கெட்டிங்:
50 இடங்கள்.
தகுதி:
சேல்ஸ்/ மார்க்கெட்டிங் பாடத்தில் எம்பிஏ பட்டம்.
வயது:
28.2.2015 தேதிப்படி 21 லிருந்து 30க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 1.3.1985க்கு முன்னதாகவும், 28.2.1994க்கு பின்னதாகவும் (இரண்டு தேதிகள் உட்பட) பிறந்திருக்கக் கூடாது. வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.600. (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.50). இதை டெபிட்/ கிரெடிட் கார்டுகள்/ இன்டர்நெட் பேங்கிங்/ ஐஎம்பிஎஸ்/ கேஷ் கார்டுகள்/ மொபைல் வாலெட்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு முறையில் செலுத்தலாம். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.orientalinsurance.org.in என்ற
இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் மட்டும் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 15.5.2015.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 20.3.2015.
No comments:
Post a Comment