அதிரையில் இன்று மாலை பட்டுக்கோட்டை சாலை மின்சார வாரிய அலுவலக அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிரை புதுத்தெருவை சேர்ந்தவர் முகைதீன். இவரது மகன் ஹனீப் ( வயது 17 ) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை பயணமானார். வாகனம் மின்சார வாரியம் அருகே வந்த போது சாலையின் குறுக்கே புகுந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பயணமான முன்று பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஹனீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த உடல் அதிரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment