முதல்வராக 49 நாட்களே பதவி வகித்த கெஜ்ரிவால், இந்த முறை 5 ஆண்டுகள் முழுவதும் முதல்வராக நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த முறை சுகாதாரம் மற்றும் கல்வியை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் 2700 கோடி ரூபாய் நிதியை 4000 ஆயிரம் ரூபாய் கோடியாக உயர்த்தப்படும் என்றும், ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் படுக்கை எண்ணிக்கை 29 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும், 500 புதிய பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆம் ஆத்மி இன்று வாக்குறுதி அளித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே 900 தொடக்க சுகாதார மையம் தொடங்கப்படும் என்று உறுதியளித்தள்ளது. அத்துடன், டெல்லி முழுவதும் இலவச ஆம்புலன்ஸ், இலவச பிணவறை சேவை, அனைவருக்கும் சுகாதார அட்டை போன்றவைகளும் அடங்கும். மேலும், ஆம் ஆத்தி மூத்த குடிமக்களுக்கு இலவசமாக மாத்திரைகளை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குதல், பள்ளிகளுக்கு மேலும் சுயாட்சி அதிகாரம், கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக செலவு செய்தல், 17 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை போன்ற வாக்குறுதிகளையும் அள்ளி வீசியுள்ளது.
வரும் 10-ந்தேதியில் இருந்து 16 சட்டன்றத் தொகுதிகளில் இந்த அம்சங்களை முன்வைத்து ‘டெல்லி டயலாக்’ சந்திப்புகளை நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஷிஷ் கேட்டன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment