தொடர்ந்து மதத்தை கையில் எடுத்து அரசியல் செய்யும் அஜண்டாவை தற்போது நாம் காண முடிகிறது .நாட்டின் வளர்ச்சி கேள்வி குறியாக இருக்கிறது
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் கரீனா கபூர். இவரை வைத்து தங்கள் மதமாற்ற பிரச்சாரத்துக்கு விளம்பரப் பிரச்சாரம் செய்துள்ளது துர்கா வாக்னி என்ற பெண்கள் அமைப்பு.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விஸ்வ ஹிந்து பிரிஷத் அமைப்பின் பெண்கள் அமைப்பு தான் இந்த துர்கா வாக்னி அமைப்பு.
இவ்வமைப்பு, அணமையில், முஸ்லீம் ஆண்களை திருமணம் செய்து கொண்டு முஸ்லீமாக மதமாறிய இந்துப் பெண்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றுவதில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்காக, இந்தி திரைப்பட நடிகை கரீனா கபூரின் படத்தில், ஒரு புறம் பர்கா அணிந்தவாறும், மறுபுறம் நெற்றியில் குங்குமமும், திலகமும் இட்டவாறும் போஸ்டர்கள் உருவாக்கி, அதில் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலான வாசகங்களை பதித்து டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரசங்கப்படுத்தி வருகின்றனர்.
கரீனா கபூர் கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். துர்கா வாகினி அமைப்பின் நிர்வாகி ரஜினி துக்ரல், இது குறித்து விளக்குகையில்,
கரீனா கபூர் ஒரு பிரபலம் என்பதால் அவரது படத்தைப் போட்டோம். முஸ்லிம்களைதிருமணம் செய்த 16 இந்து பெண்கள் தாய் மதத்துக்கு மாற்றுமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களில் இருவரை தாய் மதத்துக்கு மாற்றியுள்ளோம். ஒருவருக்கு மறுமணமும் நடந்துவிட்டது.
இச்சம்பவத்திற்கு, கரீனா கபூரின் கணவர் சைப் அலி கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், தங்கள் அமைப்பினரின் இந்த செயல் தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர் தாராளமாக நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
நாட்டில் வளர்ச்சி என்று ஆட்சியை பிடித்து இது போன்ற மதனகலை வைத்து அரசியல் செய்யும் மத்திய அரசை சாமூக ஆர்வலர்கள் கடுமையாக சாடி உள்ளார்கள் சமூக வலைதளங்களில் . நாட்டின் ஒற்றுமையை குலைத்து இது பொண்ட அரசியல் பின்னணி நம் நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வளவும் சந்தேகம் இல்லை
No comments:
Post a Comment