இலங்கை: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து "இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை" செய்வதாக புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதிய அரசின் செய்தித் தொடர்பாளரான ரஜிதா சேனரத்னே கூறும்போது, "இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவுக்கு புதிய அரசு முக்கியத்துவம் அளிக்கும். இந்தியாவுடனான உறவுக்கு அச்சாரமாக, இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும், குறிப்பாக தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அனைத்தையும் விடுவிப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இதுவரை பத்திரிகைகள் உள்ளிட்டவற்றுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களை மேம்படுத்தும் 100 நாள் திட்டத்தை மைத்ரிபால வகுத்துள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்து தலைவர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ திரும்ப நாட்டுக்கே திரும்பி வர வேண்டும் என்றும் அதிபரின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment