புதுடெல்லி: 32 இணையதளங்கள் மீது விதித்த தடையை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தி வருவதாக கூறி, "கிட்ஹப், சோர்ஸ்போர்ஜ், டெய்லிமோஷன், பேஸ்ட்பின் உள்ளிட்ட பிரபல இணையதளங்கள்" உள்பட 32 இணைய தளங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் மும்பை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, இந்த இணைய தளங்களின் பக்கங்களை பார்க்க, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69 ஏ-யின் கீழ் தடையும் செய்யப்பட்டது.
இவற்றில் கிட்ஹப், சோர்ஸ்போர்ஜ் ஆகிய இணைய தளங்களை மென்பொருள் புரோகிராமர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இணைய தளங்களை தடை செய்வதற்கு முன்பு இது குறித்த தெளிவான வரையறைகள் உருவாக்கி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது.
இந்நிலையில், இன்டர்நெட் சேவை அமைப்புகள் அரசுடன் உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து, 32 இணையதளங்கள் மீது விதித்த தடையை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment