மோசமான குற்றங்கள் புரிந்து மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றிய பின்னர், அவர்களின் உடல் உறுப்புகளை சீனா அகற்றி வருகிறது.
உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த வழக்கம் உள்ளது.
இவ்வாறு அகற்றப்படும் உடல் உறுப்புகள், மாற்று அறுவை சிகிச்சை செய்கிறவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.
இப்படி மரண தண்டனை கைதிகளின் உடல் உறுப்புகளை எடுத்து, பிற நோயாளிகளுக்கு வழங்குவது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், இந்த நடைமுறையை நிறுத்த சீனா முடிவெடித்துள்ளது. புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன மனித உறுப்பு நன்கொடை கமிட்டியின் தலைவர் ஹூவாங் ஜீபு கூறுகையில்,
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக மரண தண்டனை கைதிகளின் உறுப்புகளை, அவர்களது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அகற்றி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அத்தகையை ஒரு செயலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள, உறுப்பு கிடைப்பதற்காக ஆண்டுதோறும் 3 லட்சம் நோயாளிகள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment