தமிழகம்தான் மருத்துவ சுகாதார பணிகளில் முதலிடத்தில் உள்ளது. அதே தமிழகத்தில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று அடிக்கடி செய்திகள் வெளியாகிறது.தற்போதைக்கு தமிழகம் முழுவதும் 30,000 போலி மருத்துவர்களுக்கு மேல் உள்ளதாகவும், கிராமங்கள் கிராமப்புறம் மட்டுமின்றி நகர்புறங்களில் கூட போலி டாக்டர்களின் நடமாட்டம் இருப்பது குறித்து வெளியான பத்திரிகை செய்தியின் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம், இதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.அதன்படி, அந்த போலி டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
முறையாக எம்.பி.பி.எஸ் படிக்காமல் டாக்டரிடம் கம்பவுண்டர், வார்டுபாய் போன்ற வேலை செய்த அனுபவத்தின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போலி டாக்டர்கள் சிறிய அளவில் கிளினிங் நடத்தி வருகின்றனர். ஏழை மக்களின் உயிருடன் விளையாடும் இவர்களுக்கு கிராமப்புறங்களில் மவுசும் அதிகமாக உள்ளது. போலி டாக்டர்கள் கைது என்று செய்தித்தாள்களில் அவ்வப்போது பார்க்கலாம். சில நாட்களிலேயே அந்த பரபரப்பு ஓய்ந்துவிடும். மக்களும் அதை மறந்து விடுவர். சமீபத்திலும் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படி சில மாவட்டங்களில் கைது செய்யப்பட்ட போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போலி டாக்டர்களை அடையாளம் காணும் பணிகள் நடக்கின்றனவா என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் படித்தவர்கள் எல்லாம் இப்போது அவரவர் எல்லையைத் தாண்டி அலோபதி சிகிச்சை செய்து வருகின்றனர்.
எம்பிபிஎஸ் முடிப்பதுடன், குழந்தை, மகப்பேறு, காசநோய் என பல்வேறு சிறப்பு மருத்துவ படிப்புகளையும், முதுநிலை சிறப்பு மருத்துவமும் படித்துவிட்டு தனியாக மருத்துவமனை நடத்துபவர்களை விட அதிக வருமானம் பெறுபவர்களாக கிராமப்புறங்களுக்கு புற்றீசல் போல படையெடுக்கும் போலி டாக்டர்கள் உள்ளனர்.. ஒருவர் சராசரியாக 8ம் வகுப்போ, 10ம் வகுப்போ, பிளஸ் 2 படிப்போ அல்லது டிப்ளமோ இன் பார்மஸி முடித்துவிட்டு மருந்துக்கடைகளில் சேல்ஸ் மேனாகவோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் உதவியாளர்களாகவோ பல ஆண்டுகள் வேலை செய்த பின்னர், தங்களுக்கு தெரிந்த மருந்துகள் எந்தெந்த வியாதிகளுக்கு வழங்கப்படுகிறது என்ற அனுபவத்தை கொண்டு தனியாக கிளினிக் நடத்துபவர்களே போலி டாக்டர்கள் என்று அடையாளம் காட்டப்படுகின்றனர்.
இதனிடையே தமிழ்நாட்டில் நாமக்கல்லில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பேசுகையில், தமிழ்நாட்டில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் நடமாடி வருவதாகவும், குறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் கணிசமான போலி டாக்டர்கள் இருப்பதாகவும் கூறியதாக தேசிய மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது. அந்த தகவல்உண்மையாக இருந்தால், அது தமிழக மக்களின் மனித உரிமையை மீறிய செயல் என்று நீதிபதி டி.முருகேசன் கூறியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்று நாம் அடிக்கடி செய்தி தாள்களிலும் தொலை காட்சிகளிலும் பார்த்துக் கொண்டு வருகிறோம் தற்போது தமிழகத்தில் சுமார் 30,000 ஆயிரம் போலி மருத்துவர்களுக்கு மேல் உள்ளதாக செய்திதால்களில் வந்து கொண்டுயுள்ளது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறதே தவிர குறைந்தாகவே தெரியவில்லை இதற்க்கு காரணம் எண்ண ? நமது நாட்டில் சட்ட திட்டங்கள் சரியாக இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.
ReplyDeleteபிடிபடும் போலி டாக்டர்களை சரியான முறையில் சட்டம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குமேயானல் நிச்சயம் மீண்டும் ஒரு போலி என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடும், மனித உயிர்களில் விளையாடும் போலி மிருகங்களை அரசு கடும் தண்டனை வழங்க வேண்டும் மனிதர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குமா அரசாங்கம்...?
என்றும் அன்புடன்
அதிரை அல்மாஸ்