குறித்த சர்ச்சைக்குரிய ஆசிரமத்தில் 14 வயதுடைய சிறுவனுடன் உடலுறவு கொண்டதை பெண்ணொருவர் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
நியூசவூத் வேல்ஸ் மாநிலத்தில் இயங்கிய சத்தியானந்தா யோகா ஆசிரமத்தில் 1970ஆம், 1980ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றி சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி விசாரிக்கும் அரச ஆணைக்குழுவின் முன்னிலையில் பலர் சாட்சியம் அளித்தார்கள்.
இந்த விசாரணையின் முன்னிலையில் 50 வயதான ஷிஷி என்ற பெண்ணொருவர் சாட்சியமளித்தார்.
ஆசிரம சிறுவர்களை பாதுகாக்கத் தவறியமை குறித்து ஷிஷி மன்னிப்புக் கோரினார். ஆசிரமத்தின் பணிப்பாளர் சுவாமி அகந்தானந்தாவுடன் உடலுறவு கொள்வதற்காக பிள்ளைகளை அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களுக்குத் துரோகமிழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமக்கு 24 வயதாக இருக்கும்போது, 14 வயதுடைய சிறுவனுடன் உடலுறவு கொள்ளத் தொடங்கியதாக ஷிஷி குறிப்பி;ட்டார். சுவாமி அகந்தானந்தா அவ்வாறு செய்யச் சொன்னதாக அவர் கூறினார்.
தாம் ஆச்சிரமத்தை விட்டு வெளியேறி, தாம் உறவு கொண்ட சிறுவனுடன் காதல் கொண்டு ஒன்றாக வாழத் தொடங்கியதாக ஷிஷி குறிப்பிட்டார்.
இந்தப் பெண்மணி மங்குரோவ் மவுண்டனில் இருந்த ஆசிரமத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்பில் இரண்டாவது இடத்தில் கடமையாற்றினார். இவர் பிள்ளைகளை உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
No comments:
Post a Comment