மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய, கம்ப்யூட்டர் தேர்வில், ஆறு வயது பிரிட்டன் சிறுவன் பாஸ் செய்து சாதனை படைத்து உள்ளான். லண்டனின் கோவென்ட்ரி பகுதியில் வசிக்கும் ஆறு வயது சிறுவன் அயான் குரேஷி. கம்ப்யூட்டர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8.1 தேர்வெழுதி பாஸ் செய்துள்ளான். இந்தத் தேர்வு, ஒருவரின் புத்தி கூர்மை மற்றும் திறனாய்வு ஆகியவற்றை சோதிக்கும் விதமான பகுதிகளை உள்ளடக்கியது.
2 மணி நேரத்துக்கான இந்தத் தேர்வில் 40 முதல் 90 கொள்குறி வகை வினாக்கள், டிராக் அன்ட் டிராப், மற்றும் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி., ப்ரீ வெப் புரோக்ராமை பயன்படுத்தி, எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ்., ஜாவா ஸ்கிரீப்ட்டுகளுடன் வெப்சைட்டுகளை உருவாக்குவது தொடர்பான கேள்விகளும் உண்டு.
இது குறித்து அவனது தந்தை ஆசிம் ”அயானுக்கு மூன்று வயது முதல் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது. வீட்டில் இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் லேப் உள்ளது. அதில் தினமும் இரண்டு மணிநேரம் பயிற்சி செய்து வருகிறான். பொதுவாக பட்டதாரிகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தும் கம்ப்யூட்டர் தேர்வில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், சிறப்பு அனுமதி பெற்று தேர்வு எழுதியதுடன் இரண்டரை மணி நேரத்திற்குள் தேர்வு எழுதி முடித்து பாஸ் செய்து சாதனை படைத்துள்ளான். குறைந்த வயதில் ‘மைக்ரோசாப்ட் சர்ட்டிபைட் புரபஷனல்’ சான்றிதழ் பெற்றுவிட்டான், என்றார்.
No comments:
Post a Comment