பெங்களூரில் நர்சரி பள்ளியில் படித்து வந்த மூன்று வயது சிறுமியை ஆசிரியரே கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அங்குள்ள பள்ளியில் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மற்றொரு பள்ளியில் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று காலை மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்ற தங்கள் குழந்தை மாலையில் மிகுந்த சோர்வுடன் வீடு திரும்பியதை கண்டு அவளது பெற்றோர் கவலையடைந்தனர். ஜலஹள்ளியில் உள்ள பள்ளியிலிருந்து சிறுமியின் தாய் அவளை அழைத்துவரும்போதே அச்சிறுமி அழுது கொண்டே இருந்திருக்கிறது.
வீட்டிற்கு வந்த போது சிறுமிக்கு காயச்சலும் காணப்பட்டது. ஆனால் அச்சிறுமியால் பள்ளியில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை என்னவென்று பெற்றோரிடம் சொல்ல தெரியவில்லை. தன்னை பள்ளியில் அடித்தாக மட்டுமே அவளால் கூற முடிந்தது. அதன் பின்னரே பெற்றோர்களுக்கு உண்மை புரிய வந்தது. அவர்கள் தங்கள் குழந்தை சீரழிக்கப்பட்டிருப்பதை அறிந்துகொண்டனர். உடனடியாக குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தினர்.
இதையடுத்து அச்சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். பெங்களூர் நகர காவல் ஆணையரான எம்.என். ரெட்டி கற்பழிக்கப்பட்ட சிறுமி பயின்று வந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதனிடையே இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment