சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் மூடப்பட உள்ள நிலையில் அங்கு `அம்மா மொபைல்’ தயாரிக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.
நோக்கியா நிறுவனம் செல்போன் உற்பத்தியை வரும் நவம்பர் 1முதல் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து கடும் பாதிப்புக்கு ஆளாக உள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசிய, சி.ஐ.டி.யூவின் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான அ.சௌந்திரராஜன் கூறுகையில், அம்மா குடிநீர், அம்மா உப்பு உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதைப் போல ‘அம்மா மொபைல் போன்’ களையும் அறிமுகப்படுத்தலாம். அதற்கு மூடப்பட உள்ள நோக்கியா நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்.
அரசின் சார்பில் லேப்டாப்புகள் இலவசமாக வழங்கும் போது செல்போன்களை வழங்கிட முடியும். ஒரு செல்போன் விலை ரூ.700 க்கு விற்பனை செய்ய இயலும். அதனால் தொழிலாளர்களின் பாதிப்பு தடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment