நீதியரசர் மார்கன்டேய கட்ஜூ தமக்கும் தமிழத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றி இன்று அவரது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு..
1963-1967 ஆகிய ஆண்டுகாலங்களில் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் கூடுதல் பாடமாக தமிழ் பட்டப் படிப்பில் இணைந்தது…!
1967 ஆம் வருடம் அலகாபாத் பல்கலையில் படிப்பை முடித்த பின்னர் தமிழகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஓராண்டு தமிழ் பேசுவதற்கான பட்டப் படிப்பில் சேர்ந்தது..!
அன்னாமலைப் பல்கலை பற்றிய தனது நினைவுகள்,போதித்த தமிழாசிரியர்கள், கம்பன் மாணவர் விடுதியில் தனது அறையில் கூட்டாளியாக தங்கியிருந்த தோழர்கள்..!
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பின்பு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் கம்பன் விடுதிக்கு வந்த போது அங்கே தமக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு..!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ் பட்டப் படிப்பு படித்த வேளையில் படித்த திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியது…!
மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய போது சிலப்பதிகாரத்தையும்,இளங்கோவடிகள் குறித்தும், கண்ணகி மதுரையை எரித்த சம்பவம் குறித்து பேசியது…!
உச்சநீதிமன்றத்தில் தமது அமர்வில் ஆஜராகி வாதாடும் தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்களிடம்.., அவர்களின் வாதத்தில் ஏதுமில்லை என்று கருதினால் ‘உட்காருங்க’ என்று தமிழிலேயே சொன்னது..!
தமிழக வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தால் டிஸ்மிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லாமல், ‘தள்ளுபடி’ செய்யப்படுகிறது என்று தமிழிலேயே சொன்னது..!
இவை போன்று தமக்கும் தமிழ்,தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்புகளை சுவைபட எழுதியுள்ளார்.
தமிழில் : ரிஃபாயி
No comments:
Post a Comment