ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் பிரியா(17). இவர் ஜோலார்பேட்டை– வாணியம்பாடி மெயின் ரோடு வக்கனம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
இதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருக்கு சென்றிருந்த தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவி பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த பெற்றோர் மகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து மாணவியின் பிணத்தை மீட்டனர். மேலும் மாணவி சம்பந்தப்பட்ட ஆசிரியர் செக்ஸ் தொல்லை குறித்து எழுதியிருந்த கடிதத்தையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியரின் செக்ஸ் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment