இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.
தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காக போர் விதி மீறல்களை மீறிய - மனித உரிமை களை நசுக்கிய காரணங்களுக்காக போர் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவு படுத்துவதாக ஆகும். சுப்பிரமணியசாமியையும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித வாழ்வுரிமைகளைப் பறிக்கவும், இனத்தையும் கொன்றழிக்கத் தூண்டும் குற்றத்திற்காக இந்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment