ஒரு டீ விற்பனையாளர் நாட்டின் பிரதமராக கூடிய அளவுக்கு உயர முடியும் என்றால், என்னாலும் ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக முடியும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ கட்சி பத்திரிக்கையான சாம்னாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பால் தாக்ரே ஒரு போதும் தேர்தலில் போட்டியிட வில்லை என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் பொறுப்புகளில் இருந்து விலகிச்செல்ல மாட்டோம். டீ விற்பனை செய்த சாதரண நபராக இருந்த மோடி நாட்டின் பிரதமராக முடியும் என்றால் என்னாலும் முதல் மந்திரியாக முடியும்.
மகாராஷ்டிராவில் பிரச்சாரம் செய்யும் மத்திய மந்திரிகள் தேர்தலுக்கு பின் இங்கு வரமாட்டார்கள். சிவசேனா மட்டுமே இங்கு இருந்து தொடர்ந்து மக்களும் சேவை செய்யும் என்பதை மக்கள் உணர வேண்டும். அதிகாரத்துக்கான பசியுடன் இருக்கும் பாரதீய ஜனதா எங்களுடனான கூட்டணியை முறித்து கொண்டது. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற்று நாட்டை ஆள்வது போன்று மாநிலத்தையும் ஆள பாஜக நினைக்கிறது. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தால் மகாராஷ்டிராவை பிரிக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் ஒரு போதும் அது நடக்க சிவசேனா அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment