நிதி நிறுவனர் நடத்திய பலாத்கார வலையில் சிக்கியது எவ்வாறு என்பது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிசில் கூறியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மந்தவெளியை சேர்ந்தவர் சிவராஜ் (42). பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.
வட்டி கொடுக்க முடியாத பெண்களை, தனது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.
அவ்வாறு உல்லாசமாக இருந்த போது, அவர்களுக்கு தெரியாமல் அதை கானொளி படம் எடுத்துள்ளார். இந்நிலையில், அவரது கைப்பேசி பழுதானதால், சர்வீசுக்கு கொடுத்தார்.
அப்போது, மெமரி கார்டில் பதிவாகி இருந்த ஆபாச படங்களை பார்த்த கடைக்காரர், அதை சிடியாக பதிவு செய்து பலருக்கும் விற்பனை செய்தார்.
இதையறிந்த பாலக்கோடு பொலிசார், சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெல்ரம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சிவராஜின் ஆபாச கானொளிகளை வெளியே பரவ விட்ட கைப்பேசி கடைக்காரர் முன்னா என்பவரை பொலிசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சிவராஜின் ஆபாச கானொளிகளை திருப்பி தருவதற்கு ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய முன்னாவை, பண்ணை வீட்டிற்கு வரவழைத்து சிவராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த முன்னா, சிவராஜின் ஆபாச கானொளிகளை தனது நண்பர்களுக்கு அனுப்பியதோடு, சிடியாக மாற்றி விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனிடையே, சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற பொலிசார் செய்த முயற்சியில், பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் 5 பெண்களிடம் பென்னாகரம் டிஎஸ்பி அண்ணாமலை விசாரணை நடத்தினார்.
இதில் சிவராஜ் தங்களை எப்படியெல்லாம் மிரட்டினார், அடித்து துன்புறுத்தி பலாத்காரம் செய்தார், சிவராஜின் பிடியில் தாங்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து அந்த பெண்கள் கதறியழுதபடி கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து 4 பெண்கள் எழுத்து மூலம் புகார் செய்துள்ளனர், இது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment