ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் தங்களுடைய வாழ்க்கையை இன்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த சிவனாத் மற்றும் சிவராம் என்ற இந்த ஒட்டுப்பிறவிகளுக்கு, இரு மூலை, தலை மற்றும் இருதயம் இருந்தாலும், இவர்களுக்கு ஒரே ஒரு வயிறு இருப்பதினால், பிரிப்பதும் கடினமாக இருந்தது.
அவர்கள் தாங்களாகவே குளிப்பது, உடை மாற்றிக் கொள்வது, உணவு சாப்பிடுவது போன்ற செயல்களினால் மருத்துவர்களையே திகைக்க வைத்துள்ளனர்.
இந்த இணைபிரியா பிறவிகளும், நாங்கள் பிரிய விரும்பவில்லை, எப்பொழுதும் இணைந்தே இருக்க போவதாகவும், நாங்கள் எப்படி பிறந்தோமோ அப்படியே வாழ போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இவர்களின் தந்தை கூறுகையில், இப்படி இருப்பது அனைவருக்கும் ஒரு வேடிக்கையாக இருந்தாலும், அவர்கள் வேதனையை நான் மட்டுமே அறிவேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டுப்பிறவிகளாக தனாகவே தனித்து வாழும் இவர்களை கிராம வாசிகள், கடவுளின் அவதாரம் என்று வழிப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment