சீனாவில் தேன் வியாபாரி ஒருவர் 100 பவுண்ட் எடை கொண்ட தேனீக்களை சட்டை போன்று அணிந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஷி பிங் (34) என்ற தேன் வியாபாரி, தனது உடம்பில், 100 பவுண்ட்ஸ் எடை கொண்ட 46,000 தேனீக்களை சட்டை போல் அணிந்து கொண்டுள்ளார்.
அவர், தனது தேன் வியாபாரத்தை பெருக்க இந்த விநோதத்தை செய்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த மாதிரியான செயலில் ஈடுபடுவதற்கு பயமாக இருந்தாலும், 20 முறை தேனீக்கள் கடித்து இருந்தாலும், நான் நகராமல் இருந்ததே வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என்னுடைய முயற்சி ஒரு உலக சாதனை இல்லை என்றாலும், ஆடைகள் இல்லாமல் ஸ்டண்ட் நடத்தி சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விப்பின் என்றவர், 135 பவுண்டு எடை உள்ள தேனீக்களை உடம்பில் அணிந்தது, கின்னஸ் சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது
No comments:
Post a Comment