காபி என்பது எல்லோராலும் மிகவும் விரும்பிக் குடிக்கப்படும் பானம். இதில் கலந்திருக்கும் இரசாயனப் பொருள் கஃபின் (Caffeine) இதனால் ஏற்படும் சீர்கேடுகள் பலப்பல. காலையில் கண் விழித்த உடனேயே காபி, தேநீர் போன்றவைகள் மூலம் இரசாயன ஆபத்துக்களை நாம் மனம் விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்.
1. குழந்தைகளின் உறக்கத்தை தடுத்து வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது கஃபீன்.
2. கஃபீன் பித்தத்தை அதிகரித்து வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், அஜீரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
3. கஃபீன் உடல் எலும்புகளிலுள்ள தாதுக்களின் அடர்த்தியைக் (Bone Mineral Density) குறைத்து. அவற்றை வலுவிழக்கச் செய்யும். அதனால் அடிக்கடி எலும்பு முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
4. கஃபீன் இரைப்பையில் அமிலத்தை அதிகப்படுத்தி புண்களை ஏற்படுத்துகிறது.
5. கஃபீன் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது.
6. கஃபீன் பலவிதமான நரம்பியல் கோளாறுகளையும் (Tention) ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது.
7. கஃபீன் சிறு நீரகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
8. கஃபீன் இதயத்தை வலுவிழக்கச் செய்கிறது. குழந்தைகளும் பெண்களுமே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கஃபீன் என்ற
இரசாயனம் சேர்ந்த பொருட்களை ஒதுக்கினால்தான் சமுதாயத்தில் முழு ஆரோக்கிய நிலை உருவாகும். ஆதாரம்:
1. The Hindu (06.10.1996) 2. American Journal of Epiderniology (July 1998) 3. Journal of American Medical Association (1994) 4. Annual Meeting of Nutrition Society of India (1999)
காபியிலுள்ள பேரபாயம்
காஃபியில் கஃபீன் என்ற கொடிய நஞ்சு இருப்பதும் அது நமக்குப் பல கெடுதல்களை விளைவிக்கும் என்பதும் நமக்கு முன்பே தெரிந்த விசயம்தான். ஆனாலும் நாம் காபியை நிறுத்திய பாடில்லை.
சிகரட் அட்டைப் பெட்டியில் கேன்சர் வரும் என்ற அபாய எச்சரிக்கை இருந்தும் சிகரட் பிடிப்பவர்கள்தானே நாம். ஆனாலும் காபியிலுள்ள பேராபத்தான விசயங்கள் ஆராய்ச்சிகளில் தற்போது நிரூபணமாகியுள்ளன.
நமது எலும்பில் உள்ள தாதுக்களின் அடர்த்தியை கஃபீன் பெருமளவில் குறைத்து விடுகிறது. தாதுக்களின் அடர்த்தியை குறைத்து விட்டால் எலும்புகள் மிக சுலபமாக ஒடிந்து விடும் என்ற ஆபத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அதிகமாக காபி அருந்தும் பெண்களையும் அறவே காபி அருந்தாத பெண்களையும் வைத்து இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. மூன்றாண்டு கால சோதனையில் அதிகமாகக் காபி அருந்தும் பெண்களின் எலும்புகளில் தாது அடர்த்தி மிக மிக குறைந்து விட்டது தெளிவாக தெரிய வந்துள்ளது. காபி அருந்தாத பெண்களின் எலும்புகள் சிறிதும் பாதிக்கப்படவில்லை. மூன்று கோப்பை காபி அல்லது ஆறு கோப்பை தேநீர் ஆகியவை தினசரி குடிப்பவர்களுக்கு அபாயம் வெகு அருகில் இருக்கின்றது என்பது தெளிவு. மாதவிடாய் நேரத்தில் ஏற்படுகின்ற வலி குறிப்பாக மார்பக வலியை (ஙிக்ஷீமீணீst றிணீவீஸீ) காபியில் உள்ள கஃபீன் அதிகரிக்கச் செய்கிறது. ஆதாரம்: Dr. Nirmala jayasankar, Apollo Hospital, New India Exp, April 24, 2000, The Hindu, Nov. 8, 2000.
காபி அருந்துவதால் ஆண்மை பாதிக்கப்பட்டு தந்தையாகும் பெரும் பாக்கியம் பறிபோகும் நிலையுள்ளதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. டாக்டர் மெரின் க்ளென்வில் என்ற மருத்துவர் கூறுவது:- தினமும் ஒரு கோப்பை காபி அருந்துவது கூட நீங்கள் குழந்தை பெறும் வாய்ப்பை பாதியாக குறைத்துவிடும். பருகும் அளவிற்கேற்ப காபி விந்தனுக்களை அதிகமாக பாதிக்கின்றது. ஆதாரம்: The Hindu 9.2.2006
அமெரிக்காவின் டொரெண்டோ பல்கலைக்கழக ஆய்வு, காபி இருதய தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கின்றது. சுமார் 4000 காபி அருந்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சியான முடிவு தெரியவந்துள்ளது. இதய தாக்குதல் ஒரு நாளைக்கு 2-3 கோப்பை காபி அருந்துவோருக்கு 35% வாய்ப்பும், 4 கோப்பைக்கு மேல் காபி அருந்துவோருக்கு 64% வாய்ப்பும் இளம் வயதினருக்கு மிகவும் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது. காபி குடித்தால் கரு கலையும் அபாயம் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இரத்தச் சோகையை ஏற்படுத்தும் தேநீர்
மக்களைஅடிமைப்படுத்தி வரும் காபி மற்றும் தேநீரின் தீய விளைவுகள் பலவற்றை விஞ்ஞானிகள் தற்போது நிரூபித்து வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் நடத்திய சோதனைகளில் 56.5% குழந்தைகள் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் சத்துள்ள உணவுகளை உண்டபோதிலும் அதிலுள்ள இரும்புச் சத்து உடலில் சேர்வதில்லை. இக்குழந்தைகள் அனைவரும் தேநீரை மிகவும் விரும்பி அருந்தும் பழக்கமுள்ளவர்கள். தேநீரிலுள்ள ஒரு வித ரசாயனப் பொருள் உணவிலிருந்து இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுத்துவிடுவதாக தெரியவந்துள்ளது. எனவே இரத்தச் சோகையை ஏற்படுத்தும் தேநீர் பழக்கம் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் வேண்டுமா?
ஆதாரம்: K.A.George etal Annual Meeting of Nutrition society of India.
சமைக்கும் உணவில் இரசாயனம்
பல்வேறு உணவகங்களிலும் சுவையைக் கூட்டுவதற்காக வெவ்வேறு வகை இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். முக்கியமாக துரித உணவு (Fast Food) எனப்படும் 'துஷ்ட' உணவில் சேர்க்கப்படும் சுவையூட்டும் அஜினமோட்டோ (மோனோ சோடியம் குளுட்டமோட்) இன்று பல வீடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
• இந்த அஜினமோட்டோவினால் பல ஒவ்வாமை விளைவுகள் ஏற்படுகின்றன. இதற்கு சீன உணவக நோய் (Chinese restaurant syndrome) என்ற பெயரும் உண்டு. ஏனெனில் சீன உணவுகளில்தான் இந்த அஜினமோட்டோ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
• இதை அதிகமாக உண்பதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பலருக்கு மூளையின் செயல்பாடே மாறிவிடுவதாக தெரிகிறது.
• இப்பாதிப்பு பெரியவர்களை மட்டுமின்றி கருவில் இருக்கும் சிசுக்களைக் கூட பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
• உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் (Groth Hormone) மற்றும் ஆண்மைப் பண்புகளுக்குரியடெஸ்டோடிரோன் (Testosterone) என்ற ஹார்மோன் அளவும் இந்த இரசாயனத்தால் குறைவது தெரியவந்துள்ளது.
• இதை தொடர்ச்சியாக உபயோகித்தால் பெண்களுக்கும் பாலுணர்வில் விருப்பம் குறைதல் (Lack of Sexual desire) ஏற்படும்.
• மோனோ சோடியம் குளுட்டமேட்டின் ஆதிக்கத்தால் முதுமையில் வரக்கூடிய உடற்பண்பு மாற்றங்கள் இளம் வயதிலேயே ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
• இதனால் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புப் பொருட்கள் அதிகரிப்பதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகின்றது.
• தலைவலி, ஆஸ்துமா, தோல் நமைச்சல் மற்றும் முகவீக்கம் போன்ற ஒவ்வாமை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
• அதிக அளவில் சுவைக்காக உணவில் சேர்ப்பதால் குமட்டலும், வயிற்று வலியும் ஏற்பட்டுக் கணையமும் பாதிக்கப்படும்.
- அ. சித்தி அலி D.Acu.
நன்றி : சமூகநீதி அறக்கட்டளை
No comments:
Post a Comment