டெல்லி: ரம்ஜான் மாதம் தொடங்கி இருப்பதால் பொது இடத்தில் சாப்பிடவோ, மது அருந்தவோ, புகைக்கவோ செய்யக் கூடாது. அப்படி செய்யக் கூடிய வெளிநாட்டவருக்கு சிறைத் தண்டனை, சவுக்கடி தண்டனை விதிக்கப்படுவதுடன் மற்றும் உடனே நாடு கடத்தப்படுவர் என்று அறிவித்திருக்கிறது சவூதி அரேபியா. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் நாளை தொடங்குகிறது. ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
இது தொடர்பாக சவூதி அரேபியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரம்ஜான் மாத காலத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பொது இடங்களில் சாப்பிடவோ, மது அருந்தவோ அல்லது புகை பிடிக்கவோ கூடாது. அப்படிச் செய்கிற உள்நாட்டவர் அல்லது வெளிநாட்டவர் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவர். அப்படிச் செய்வோரு சவுக்கடி அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும். வெளிநாட்டவராக இருந்தால் கூடுதலாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர். இதற்கான அனைத்து தெருக்களும் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படும். இது இஸ்லாமியராக இருந்தாலும் இல்லாவிடாலும் அனைவருக்கும் பொருந்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் புனித மாதத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களின் பணிநேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் பணி நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment