டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பின்னரும் கூட எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளில் நீடித்துக் கொண்டிருப்போருக்கு வேட்டு வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தாமஸ் லில்லி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகளுக்கு சில விளக்கங்களைக் கொடுத்தது.
இதில் ஏற்கெனவே தண்டனை பெற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு விலக்கு அளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பல எம்.பிக்களின் பதவிகளும் பல மாநிலங்களில் பல எம்.எல்.ஏக்களின் பதவிகளும் பறிபோகக் கூட அபாயம் உருவாகிறது.
No comments:
Post a Comment