Latest News

இனிமேல் சிறிய நகரங்களுக்கும் விமான சேவை!!

சிறிய நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு மிகப் பெரிய அளவில் சலுகைகளை வழங்க ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (எஎஐ) திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் இறங்குவதற்கும், மற்றும் அங்கு நிறுத்தி வைப்பதற்கும் ஆகும் கட்டணத்தில் தள்ளுபடி வழங்க இருக்கிறது. (Gold rates in India on July 10) ஏர்ஏசியா இந்தியா போன்ற விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களை சிறிய நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு இயக்கி, இந்த தள்ளுபடியைப் பெறலாம். இந்தியாவில் உள்ள ஒரு சில சிறிய நகரங்களில் இப்போதுதான் புதிய விமான நிலையங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில விமான நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த தள்ளுபடியை க்ரேட் அடிப்படையில் எஎஐ வழங்குகிறது. உதாராணமாக 3 ஆண்டுகளுக்கு இந்த விலை குறைப்பை வழங்குகிறது. இந்த விலைக் குறைப்பினால், விமான நிறுவனங்கள் தங்களின் விமானங்களை தரை இறக்குவதற்கும் மற்றும் நிறுத்தி வைப்பதற்கும் ஆகும் செலவுகளில் 10 முதல் 12 சதவீதம் வரை மிச்சப்படுத்தலாம். தற்போது எஎஐ வகுத்திருக்கும் திட்டத்தின் படி, முதல் ஆண்டில், விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களை மெட்ரோ நகரங்களைத் தவிர்த்த சிறிய நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களில் தரை இறக்கி, நிறுத்தி வைத்தால் அதற்கான கட்டணத்தில் 75 சதவீதம் தள்ளுபடி வழங்க தயாராக இருப்பதாக எஎஐ தெரிவித்திருக்கிறது.

இரண்டாவது ஆண்டில் 50 சதவீதமும் மற்றும் மூன்றாவது ஆண்டில் 25 சதவீதமும் தள்ளுபடி வழங்க எஎஐ தயாராக இருக்கிறது. நான்காவது ஆண்டில் இருந்து முழுக் கட்டணத்தை வசூலிக்க எஎஐ திட்டமிட்டிருக்கிறது. இந்த கட்டணக் குறைப்புத் திட்டதின் மூலம், சிறிய நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களின் தரத்தை உயர்த்தவும், புதிய வழித்தடங்களை உருவாக்கவும் முடியும் என்று எஎஐ நம்புகிறது. எனினும் எஎஐ கொண்டு வந்திருக்கும் இந்த புதிய திட்டம் சிவில் ஏவியேசன் துறையின் ஒப்புதல் பெற்ற பின்னரே அமுல்படுத்தப்படும். போபாலுக்கும் ஜபல்பூருக்கும் இடையில் அல்லது சென்னைக்கும் மைசூருக்கும் இடையில் அல்லது புதுச்சேரிக்கும் விஜயவாடாவுக்கும் இடையில் அல்லது கோலாபூர், ஹூப்ளி மற்றும் பெல்காம் போன்ற நகர்களுக்கு விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை இயக்கலாம் என்று எஎஐ பரிந்துரைக்கிறது. ஏனெனில் இந்த நகரங்களில் உள்ள சிறிய விமான நிலையங்களில், விமானங்கள் இறங்குவதற்கும் மற்றும் அவற்றை நிறுத்தி வைப்பதற்கும் போதுமான இடவசதிகள் இருக்கின்றன என்று எஎஐ தெரிவித்திருக்கிறது.

மேலும் தனியார் விமான நிலையங்கள் வசூலித்த கட்டணங்களைவிட எஎஐ எப்போதுமே குறைவான கட்டணத்தை எஎஐ வசூலிக்கிறது. ஏர்ஏசியா இந்திய விமான நிறுவன அதிகாரிகளுடன் எஎஐ அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் விமானங்களை இயக்குவதில் எவ்வாறு வளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று விவாதிக்கப்பட்டது. எஎஐ உருவாக்கியிருக்கும் தள்ளுபடி திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் அக்டோபர் மாதம் முதல் தென் இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களுக்கு தனது விமான சேவையை ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் தொடங்க இருக்கிறது.

எஎஐ கொண்டு வந்திருக்கும் திட்டம் படி எந்தந்த நகரங்களுக்கு ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் தனது விமானங்களை இயக்க இருக்கிறது மற்றும் புதிய வழித்தடங்களில் இயக்க இருக்கிறதா மற்றும் அந்த நிறுவனத்தின் விமானங்கள் செல்லும் வழித்தடங்கள் போன்றவற்றைக் குறித்து மாநில விமான நிலையங்களின் அமைப்பு தெரிந்து கொள்ள விரும்புகிறது. வழித்தடங்கள் முடிவு செய்த பின்பு, எஎஐயின் விமான நிலையங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுவிடும். அதன் மூலம் எஎஐக்கும் மற்றும் விமான நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் எஎஐ, தொடக்கத்தில் தள்ளுபடி மூலம் தனது லாபத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. ஆனால் போகப் போக சிறிய விமான நிலையங்களுக்கு விமானங்கள் வருவதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்று எஎஐ நம்புகிறது.

கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கட்டப்பட்டிருக்கும் புதிய விமான நிலையங்கள் குறைவான எண்ணிக்கையிலான பயணிகளுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது. உதாரணமாக, கொல்கத்தாவின் புதிய விமான நிலையம் 20 மில்லியன் பயணிகளுக்கு தனது சேவையை வழங்கும் அளவிற்கு வசதிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில் 7-8 மில்லியன் பயணிகளுக்கு மட்டுமே தனது சேவைகளை வழங்கி வருகிறது. சென்னையிலும் இதே நிலைமை நிலவி வருகிறது. ஆனால் இந்த புதிய தள்ளுபடி திட்டத்தின் மூலம் இத்தகைய குறைகள் களையப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கு சேவைகளை வழங்கலாம் என்று எஎஐ நம்புகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.